Cinema

7 வயதிலே 12 மொழிகளை பேசும் அசின் மகள்…!!!

asin daughter arin speaks 12 languages at age of 7: நடிகை அசினின் மகள் அரின் ரெய்ன் சர்மா, தனது 7 வயதிலே 12 மொழிகளை பேசுவதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அசின்.

7 வயதிலே 12 மொழிகளை பேசி அசத்தும் நடிகை அசினின் மகள் | Asin Daughter Arin Speaks 12 Languages At Age Of 7

2016 ஆம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் இணை நிறுவனர் ராகுல் சர்மாவை திருமணம் செய்து கொண்ட அசின், அதன் பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டார்.

7 வயதிலே 12 மொழிகளை பேசி அசத்தும் நடிகை அசினின் மகள் | Asin Daughter Arin Speaks 12 Languages At Age Of 7

இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. அரின் ரெய்ன் சர்மா எனப் பெயரிடப்பட்ட அந்தக் குழந்தை, கடந்த அக்டோபர் 24 ஆம் திகதி தனது 9வது பிறந்தநாளை ஜப்பானில் கொண்டாடியது.

7 வயதிலே 12 மொழிகளை பேசி அசத்தும் நடிகை அசினின் மகள் | Asin Daughter Arin Speaks 12 Languages At Age Of 7

அரின் ரெய்ன் சர்மா குறித்து அவரது தந்தை ராகுல் சர்மா முன்னர் பேசியவிடயம் தற்போது கவனம் பெற்றுள்ளது.

மகள் குறித்து பேசிய ராகுல் சர்மா, “எங்களுக்கு ஒரு அழகான மகள் இருக்கிறாள். அவளுக்கு இப்போது 7 வயதுதான். ஆனால் அவளால் ஏற்கெனவே கொரியன், ஜப்பானியன், தாய் மற்றும் சீனம் உட்பட சுமார் 12 மொழிகளைப் புரிந்துகொண்டு பேச முடிகிறது.

7 வயதிலே 12 மொழிகளை பேசி அசத்தும் நடிகை அசினின் மகள் | Asin Daughter Arin Speaks 12 Languages At Age Of 7

எனக்கு 2 மொழிகள் பேசுவதே கடினமாக இருக்கிறது. நாங்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளோடு திணறிக்கொண்டிருக்கிறோம்.

நாங்கள் இதுவரை ஆரினுக்கு தொலைக்காட்சி அல்லது கைபேசி என எந்தத் திரை நேரத்தையும் கொடுக்கவில்லை. எங்கள் வீட்டில் புத்தகங்கள் மட்டுமே உள்ளன. ஆரின் பள்ளியில் வைத்திருப்பதை விட எங்கள் வீட்டில் அநேகமாக அதிக புத்தகங்கள் இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

பல்வேறு மொழிகளை பேசுபவர்களை polyglot என அழைப்பார்கள். அசினும் ஒரு polyglot ஆவார்.

அசின் அவரது தாய் மொழியான மலையாளம், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, சமஸ்கிருதம், தெலுங்கு, பிரெஞ்ச், ஆகிய மொழிகளில் நிபுணத்துவம் பெற்றவர். மேலும், அடிப்படை மராத்தி மற்றும் இத்தாலி கற்றுளார்.

ஓய்வு நேரங்களில் ஜேர்மன் கற்பதாகவும், 2014 ஆம் ஆண்டு ஸ்பெயின் சென்று வந்த பிறகு ஸ்பானிஷ் கற்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading