Local

25 இலங்கை மீனவர்கள் மாலைதீவில் சிக்கினர்!

25 இலங்கை மீனவர்கள் மாலைதீவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த மீனவர்கள் மாலைதீவு கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டனர் எனக் குற்றம் சாட்டப்பட்டு அந்த நாட்டு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 25ஆம் திகதி இந்த மீனவர்கள் திக்ஓவிட்ட மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 4 படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

சர்வதேசக் கடல் எல்லையைத் தாண்டி மாலைதீவு கடல் எல்லையில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டமையால் அவர்கள் கைதுசெய்யப்பட்டனர் என அந்நாட்டு அதிகாரிகள் கூறினர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading