Lead NewsLocal

கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் வியாழேந்திரன்! – சித்தார்த்தன் அதிரடி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் புளொட் அமைப்பில் சார்பில் போட்டியிட்டு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட எஸ்.வியாழேந்திரன் மைத்திரி – மஹிந்த அணிப் பக்கம் தாவியதையடுத்து அவர் புளொட் அமைப்பிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளார் என்று அந்தக் கட்சியின் தலைவர் த.சித்தார்த்தன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

அவர் தமது கட்சியிலிருந்து விலக்கப்பட்டுள்ளமையினால், இலங்கைத் தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்குமாறு அந்தக் கட்சியின் செயலருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

வியாழேந்திரன் நாடாளுமன்றத் தேர்தலில் புளொட் அமைப்பைச் சேர்ந்தவராக இருந்தாலும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டிருந்தார். அவரை உடனடியாக கட்சியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading