Sports

178 ஓட்டங்களுக்குள் சுருண்ட நியூசிலாந்து!

இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிரைஸ்ட் சேர்ச்சில் இன்று ஆரம்பமானது.

நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.

இதன் அடிப்படையில் தமது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 178 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

இலங்கை அணி சார்பாக சுரங்க லக்மால் 5 விக்கெட்டுக்களையும் லஹிரு குமார 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

நியூசிலாந்து அணி சார்பாக டிம் சௌத்தி அதிகூடிய ஓட்டங்களாக 68 ஓட்டங்களைப் பெற்றார்.

இந்நிலையில், தமது முதலாவது இன்னிங்ஸில் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி சற்று முன்னர் வரை 2 விக்கெட்டுக்களை இழந்து 21 ஓட்டங்களை மட்டுமே பெற்றுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading