Cinema

திருமணத்துக்கு முன்னரே கர்ப்பமான எமி ஜாக்சன்!!

தமிழ், இந்தி படங்களில் கவனம் செலுத்தி வந்த எமி ஜாக்சனுக்கும், இங்கிலாந்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் பனயியோட்டுக்கும் கடந்த ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. விடுமுறையைக் கொண்டாட ஜாம்பியா சென்ற இடத்தில் ஜார்ஜ் காதலை தெரிவித்ததாக எமி தெரிவித்தார்.

இந்நிலையில், அவர் மீண்டும் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். எமி ஜாக்சன் தான் கர்ப்பமாக இருப்பதை காதலர் ஜார்ஜுடன் இருக்கும் புகைப்படத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவருக்கு ஒக்டோபர் மாதம் குழந்தை பிறக்கவுள்ளது. திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாவது, குழந்தை பெற்றுக் கொள்வது எல்லாம் இங்கிலாந்தில் சகஜம்.

இந்நிலையில், எமியின் அறிவிப்பைப் பார்த்த இரசிகர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

ஜார்ஜின் தந்தை ஆன்ட்ரியஸ் பனயியோட்டு இங்கிலாந்தின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவர். அவரின் சொத்து மதிப்பு ரூ.3 ஆயிரத்து 600 கோடி ஆகும்.

எமி ஜாக்சனுக்கு திருமணம் என்றதுமே அவர் தொடர்ந்து படங்களில் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், அவர் தாயாகப் போவதால் கண்டிப்பாக சில காலத்திற்கு நடிக்க மாட்டார் என்கிறார்கள்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading