LocalNorth

வடமராட்சி கிழக்கில் வீதிப் புனரமைப்பு வேலைகளுக்கான அடிக்கல்களை நாட்டினார் சுமந்திரன்!

கிராம எழுச்சித் திட்டத்தின் கீழ் யாழ். வடமராட்சி கிழக்கில் 16 மில்லியன் ரூபா செலவில் ஆழியவளை – கொடுக்கிளாய் வீதியும், 24 மில்லியன் ரூபா செலவில் வத்திராயன் – வாரிவட்டன் வீதியும் புனரமைக்கப்படவுள்ளன.

இந்த வீதிகளின் புனரமைப்பு வேலைகளுக்கான அடிக்கல்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்று சனிக்கிழமை (20) நாட்டி வைத்தார்.

இந்த நிகழ்வுகளில் பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் அ.சா.அரியகுமார், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ச.சுகிர்தன் மற்றும் மருதங்கேணி பிரதேச செயலாளர் க.கனகேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading